பாஜக தலைவர் அமித்ஷா :- யாரையும் திருப்திப்படுத்துவதற்காக மோடி அரசு முடிவுகளை எடுப்பதில்லை.
ச.சா - உண்மைதான்... யாருக்குமே திருப்தியில்லையே..??
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் :- மலேசியாவிலிருந்து ஜாகீர் நாயக்கை நாடு கடத்துவதில் தீவிரமாக உள்ளோம்.
ச.சா - ஆனா மோடி அப்படியொரு கோரிக்கைய வைக்கலேனு மலேசியப் பிரதமர் சொல்லிருக்காரே..??
மத்திய நிதியமைச்சக அதிகாரி :- ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி கடும் சரிவைக் கண்டுள்ளது.
ச.சா - பிரதமரோ, அமைச்சரோ இதச் சொல்ல மாட்டேங்குறாங்களே..??
சாமியார் ஜக்கி வாசுதேவ் :- விவசாயிகள் அனைவரும் மரக்கன்று நட்டால் தண்ணீர்ப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
ச.சா - அதான.. பழிய விவசாயிகள் மேல போட்டாச்சு..!!