politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

கொல்கத்தாவில் இந்தியா டுடே ஊடகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தாய்வு மாநாட்டில் கலந்து கொண்டேன். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிப்பதுதானே உங்களது பிரதான இலக்காக இருக்க வேண்டுமென்று என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். ஆம், நிச்சயம் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். வங்கத்தில்பாஜகவை நீங்கள் தோற்கடிக்க வேண்டுமானால், ஒரு நம்பகமான மாற்றைமுன்வைக்க வேண்டும். அப்படிப்பட்ட நம்பகமான மாற்று என்பது, வங்கத்துமக்களை நசுக்கிக் கொண்டிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரானதாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். எனவே இடதுசாரிகளே வங்கத்தின் எதிர்காலம். அதுவே நாட்டின் எதிர்காலமும். மேற்கு வங்க மக்கள், குறிப்பாக இளைஞர்கள் அமைதியான வாழ்க்கையையும், முன்னேற்றத்திற்கான கட்டமைப்பும் விரும்புகிறார்கள். அதை எங்களால் மட்டுமே தர முடியும். 

                                                                          *****************

பெரும் மரியாதைக்குரிய நீதிபதி பி.பி.சாவந்த் அவர்கள் மறைவுச் செய்தி வந்திருக்கிறது. அவரது மறைவுக்கு இதயப்பூர்வமான இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீதிபதி  சாவந்த் அவர்கள் போற்றத்தக்கதொரு வாழ்க்கையை வாழ்ந்தவர். குடிமை உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதில் ஓய்வற்ற போராளியாக திகழ்ந்தவர். இந்த போராட்டங்களை விரிவுப் படுத்துவதில் ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர். அவரது அறிவுரையும் வழிகாட்டுதலும் மிகவும் அவசியமாக தேவைப்படுகிற தருணமாக இது இருக்கிறது. அவர் உயர்த்திப் பிடித்த குடிமை உரிமைகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிற நேரமிது. இந்த தருணத்தில் அவரை நாம் இழந்திருப்பது பெரும் துயரத்திற்குரியது. 

                                                                          *****************

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மாபெரும் சாதனை படைத்துள்ளார். இது மிகவும் அற்புதமானது. பல பத்தாண்டுகள் கழித்து ஒரு வினூ மான்கட், ஒரு போல்லி உம்ரிகரைபார்க்கிறோம். ஐந்து சதங்களை அடித்திருக்கிறார். பாராட்டுக்கள் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்தியாவை பெருமைப்படுத்தி விட்டாய் வீரனே!

;