ராமகிருஷ்ண மடத்தலைவர் சுவாமி கமலாத்மானந்தா :- இந்து மதத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை இளைய தலைமுறை ஏற்க வேண்டும்.
ச.சா - இப்போ மத வெறியர்கள் கைல சிக்கி சீரழியுறதுனால சொல்லிருப்பா ரோ..??
செய்தி :- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில்முதல் தகவல் அறிக்கை தாக்கல்.
ச.சா - இப்ப இருக்குற எல்லா அமைச்சர்கள் மேலயும் வழக்கு இருக்கும் போலருக்கே..!!
மத்திய அமைச்சர் முகமது அப்பாஸ் நக்வி :- அரசியலமைப்புச் சட்டப்படி அரசு நடக்கிறது.
ச.சா - உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா..??
செய்தி :- விருப்ப ஓய்வு கேட்கிறார் மத்திய நிதித்துறை செயலாளர்.
ச.சா - இந்த அளவுக்கு உயர் பொறுப்பு கள்ல இருக்குறவங்க விருப்ப ஓய்வு வாங்குனது இந்த அரசாங்கத்துலதான்..!!