அமித் ஷா : அதி முக்கியமான தேர்தல் களத்துக்குப் போய்ட்டு வந்திருக்கீங்க.. நிலவரம் எப்படி இருக்கு?மக்கள் என்ன சொல்றாங்க?(கூட்டத்தில் மயான அமைதி. எப்போதும் லொடலொடவெனப்பேசும் எச்.ராஜா கூட அமைதியாக இருக்கிறார்.)அமித் ஷா : என்ன ஒருத்தரும் பேச மாட்டேங்கறீங்க? இங்கே நாமதானே இருக்கோம்? ஊடகப் புலிகள் யாரும் இல்லியே? சும்மா சொல்லுங்க!
ராஜ்நாத் சிங் : அந்தக் கொடுமையை ஏன் கேக்கறீங்க? நாம வரப்போற தேர்தலைப் பத்திப் பேசினா,அவங்கள்லாம் 2014 தேர்தலைப் பத்தியே பேசறாங்க..
அப்ப சொன்னதையெல்லாம் செஞ்சுட்டீங்களாங்கறதுதான் அவங்களோட ஒரே கேள்வியா இருக்கு...தமிழிசை : ஆமா தலைவரே..அது பெரிய தலைவலியாத்தான் இருக்கு. அரதப் பழசாகிப் போன அந்த
அச்சே தின்னைப் பத்திப் பேச வேண்டாம், புதிசா வரப் போற பஹுத் அச்சே தின்னைப் பத்திப் பேசு வோம்னா கேக்க மாட்டேங்கறாங்க! தமிழகத்திலே தாமரை மலர்ந்தே தீரும்னு எல்லாரும் சத்தமாச் சொல்லுங்க பாக்கலாம்னு கூச்சல் போட்டுப் பாக்கறேன். யாரும் வாயைத் திறக்காம என்னையே வேடிக்கை பாக்கறாங்க!
எச்.ராஜா : தமிழ்நாட்டை தி.மு.க. நாசமாக்கிட்டுது.. இந்தியாவை காங்கிரஸ் நாசமாக்கிட்டுதுன்னு சொல்றேன்.. ஒருத்தன் கேக்கறான்.. அதுக்கு அவங்களுக்கு 50, 60 வருஷம் தேவைப்பட்டுது.. நீங்க நாலு வருஷத்திலேயே அதை சாதிச்சுட்டீங்களேன்னு கேலி பண்றான்..
ராஜா : சரியாத்தான் சொன்னான்னு நமக்குத் தெரியுது..ஆனா அதுக்காக அவனைப் பாராட்டிர முடியுமா?யு ஆர் ஆன்ட்டி இண்டியன்.. உங்களுக்கு இங்கேஎன்ன வேலை? பாகிஸ்தானுக்குப் போய்த் தொலைய வேண்டியது தானேன்னு சத்தம் போட்டுட்டு வந்துட்டேன்..நிர்மலா சீதாராமன் : 2014, கருப்புப் பணம், 15 லட்சம், வேலை, விவசாயம்ங்கற எல்லையைத் தாண்டி வரவே
மாட்டேங்கறாங்க..
அமித் ஷா : அதெல்லாம் தேர்தல் ஜூம்லாங்கற என்னோடஅஸ்திரத்தை எடுத்து விட வேண்டியதுதானே?
நிர்மலா : விடாம இருப்பேனா? தேர்தல் முடிஞ்சதும் பாருங்க.. நாங்க விடப்போற ஜும்லாவைப் பாத்து அசந்து போகப் போறீங்கன்னு ஒரு பொண்ணு என்னைப் பாத்து செமயாக் கலாய்க்கறா.. நானும் ஒரு வுமன் லீடர்னு கூட அவ பார்க்கலை!அமித் ஷா : புல்வாமாவுக்குப் பதிலடியா பாலகோட்லே நாம சர்ஜிகல் தாக்குதல் நடத்தினமே, அதைப் பத்தி
சொல்ல வேண்டியதுதானே?
ராஜ்நாத் சிங் : சொன்னேன். பயங்கரவாதிகளோ பாகிஸ்தான் படைகளோ ஒரு தாக்குதல் நடத்தறதும் நாம பதிலுக்கு அவங்களைத் தாக்கறதும் இன்னிக்கு நேத்தா நடந்துக்கிட்டிருக்கு? காலங்காலமா இதைப் பாத்துக்கிட்டுதானே இருக்கோம்னு சர்வ அலட்சியமாஅதை ஒதுக்கித் தள்றாங்க.. எனக்கு அதிர்ச்சியிலே பேச்சே வரலை!
அமித் ஷா : நல்ல நாள்லேயே உங்களுக்குப் பேச்சு வராது. அது போகட்டும் விடுங்க! மோடியைப் பாத்துஇம்ரான் கானே இப்ப பம்மிப் பதுங்க ஆரம்பிச்சுட்டாரே.. மோடியே அடுத்த பிரதமரா வந்தா நல்லதுன்னு அவரை சொல்ல வச்சது யாரு?
நிர்மலா : இம்ரான் கானுக்கென்ன சொல்லிட்டுப் போயிடுவாரு.. சுமக்கறவங்களுக்கில்ல வலி தெரியும்னு இங்கே ட்வீட் போடறாங்க!
அமித் ஷா : மோடியோட புகழ் உலக நாடுகளில் எல்லாம்கொடி கட்டிப் பறக்குது.. இந்தியான்னு ஒரு நாடு இருக்கறதே இப்பத்தான் பல நாடுகளுக்குத் தெரிய
ஆரம்பிச்சுருக்கு.. இதையெல்லாம் எடுத்துவிட வேண்டியதுதானே?
தமிழிசை : எடுத்து விட்டேனே? மோடி உலக நாடுகள்லேஒரு நாட்டுக்குப் போயி தேர்தல்ல நிக்கட்டும்.. இங்கே வந்து நிக்கணும்னா அவரு இந்தியாவிலே உள்ளகோடிக்கணக்கான ஏழை ஜனங்களைல்ல கவனிச்சிருக்கணும்.. அவர் இதைச் செய்தாரான்னு கேக்கறாங்க!
பொன்னார் : மோடி கையை உயர்த்தி உயர்த்தி புதுசு புதுசாப் பீலா விட்டுக்கிட்டிருந்தா கேக்கறவன்லாம் என்ன கேனையனான்னு ஒருத்தன் கூப்பாடு போட்டான்.. நான் கண்ணைக் காமிச்சதும் அவனை அள்ளி போலீஸ் வேன்லே தூக்கிப் போட்டுட்டுப் போனாங்க!(மோடி உள்ளே வருகிறார். காட்சிகள் அப்படியே தலைகீழாக மாறுகின்றன).
மோடி : என்ன பேசிக்கிட்டிருக்கீங்க? நான் இல்லாமகூட்டம்போட்டு எதுவும் பேச வேண்டாம்னு சொல்லியிருக்கேனே?
அமித் ஷா : ஒண்ணும் தப்பாப் பேசலை ஜீ.. தேர்தல்லேநாம எப்படி ஜெயிக்கறதுன்னுதான் பேசிக்கிட்டிருந்தோம். அடுத்த தடவையும் நீங்க பிரதமரா வர்ரது
உறுதியாயிட்டுதுன்னு எல்லாரும் உற்சாகமா சொல்லிக்கிட்டிருந்தாங்க ஜீ!
ராஜ்நாத் சிங் : மக்கள்கிட்ட பேசும்போது 2014 பத்தி நான் பேச்சு எடுத்தாலே, அதை விடுங்கஜீ.. மோடி எங்கசவுக்கிதார்.. மோடி எங்க துப்பாக்கி.. மோடி எங்க புல்லட்ட்ரெயின்னு ஏதேதோ சொல்றாங்க.. கேட்டாலே புல்லரிச்சுப் போகுது! தமிழிசை : இந்தத் தடவை தமிழ்நாட்டிலே அஞ்சு சீட்லேயும் நாம ஜெயிக்கறோம். அஞ்சு சீட்டுக்கு எப்படி ஒத்துக்கிட்டீங்க? 20 சீட்டாவது கேட்டு நீங்க சர்ஜிக்கல்ரெய்டு நடத்தியிருக்க வேண்டாமான்னு கேக்கறாங்க!
ராஜா : நான் பேச ஆரம்பிச்சதுமே ஆன்ட்டி இன்டியன்ஸ் எல்லாம் கப்சிப் ஆயிடறாங்க. அடுத்த ஆட்சியும் நம்மோடதுதான்னு நினைக்கறாங்க போல!
நிர்மலா : நாம நடத்தின சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பத்தி வந்த நியூஸ் எல்லாம் நம்ம நாட்டு ஜனங்களை அப்படியே கட்டிப் போட்டிருக்கு.
மோடி : பஹுத் அச்சா.. பஹுத் அச்சா! இந்தத் தடவைஉலக நாடுகளையெல்லாம் ஒரு ரவுண்ட் வந்தாச்சு.. அடுத்த தடவை பிரதமரா வந்ததும் செயற்கைக் கோள்லே
ஏறி வேற ஏதாவது கிரகத்துக்குப் போக முடியுமான்னு பாக்கணும். இப்ப எல்லாரும் போய்ட்டு வாங்க. பாரத்மாதா கீ ஜெய்!
கற்பனை : ராஜகுரு