வெள்ளி, பிப்ரவரி 26, 2021

politics

img

டிஆர்பி முறைகேடு செய்ய ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்த அருணாப் - முன்னாள் சிஇஓ  வாக்குமூலம்

டிஆர்பி முறைகேடு செய்ய ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்த அருணாப்
முன்னாள் சிஇஓ  வாக்குமூலம்
மும்பை: ரிபப்ளிக் டிவியின் ஆசிரியரும், பாஜகவின் ஆதரவாளருமான  ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியிடமிருந்து டிஆர்பி முறைகேட்டிற்காக ரூ 40 லட்சம் கொடுத்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. 
பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில் (பார்க்) இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர்  பார்த்தோ தாஸ்குப்தா. டிஆர்பி முறைகேட்டை தொடர்ந்து  மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. விரணையில் பார்த்தோதாஸ்குப்தா தனது கைப்பட எழுதிக் கொடுத்த வாக்குமூலத்தில், ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியிடமிருந்து இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ .40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தெரிவித்திருப்பதாக  என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது
தாஸ்குப்தாவின் வாக்குமூலத்தில் ''எனக்கு அர்னாப் கோஸ்வாமியை 2004 முதல் தெரியும். நாங்கள் டைம்ஸ் நவ் பத்திரிகையில் ஒன்றாக வேலை செய்தோம். நான் 2013 இல் பார்க் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக சேர்ந்தேன். அர்னாப் கோஸ்வாமி 2017 இல் ரிபப்ளிக் சேனலை தொடங்கினார். ரிபப்ளிக் தொலைக்காட்சியைத் தொடங்குவதற்கு முன்பே அவர் என்னுடன் வருங்கால திட்டங்களைப் பற்றி பேசுவார். டிஆர்பி அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பது எனக்குத் தெரியும் என்று கோஸ்வாமிக்கு நன்றாகவே தெரியும். எதிர்காலத்தில் எனக்கு உதவி செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு நம்பர் 1 டிஆர்பி பெறச் செய்ய எனது குழுவுடன் இணைந்து பணியாற்றினேன். இது 2017 முதல் 2019 வரை தொடர்ந்தது. 2017 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி என்னை லோயர் பரேலில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் சந்தித்தார். அப்போது எனது குடும்பத்தினருடன் நான் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்துக்கு இன்ப சுற்றுலா செல்ல 6000 டாலர் பணம் கொடுத்தார். 
அதே ஆண்டு மீண்டும் அர்னாப் கோஸ்வாமி என்னை தனிப்பட்ட முறையில் ஐடிசி பரேல் ஹோட்டலில் சந்தித்து ரூ .20 லட்சம் ரொக்கப் பணத்தை கொடுத்தார். மேலும், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கோஸ்வாமி என்னை ஐடிசி ஹோட்டல் பரேலில் சந்தித்து ஒவ்வொரு முறையும் ரூ .10 லட்சம் கொடுத்தார். 2019 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி,  சுவீடன் மற்றும் டென்மார்க் குடும்ப சுற்றுலாவுக்கு 6000 டாலர்களை எனக்குக் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார். 
இதன் மூலம் மோடியும், அவரது ஆதரவு ஊடகங்களும் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி மோசடி செய்திருக்கின்றன என்பது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. 
 

;