புதுதில்லி, ஆக.8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இன்று(ஆகஸ்ட் 9) ஸ்ரீநகர் செல்கிறார். இது தொடர்பாக அவர் ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு வலுவான இயக்கமாகும். கலைக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் முகமது யூசுப் தாரி காமி என்கிற எங்களது சட்டமன்ற உறுப்பின ரைப் பெற்றிருக்கிறோம். அவருக்கு உடல்நலம் குன்றியிருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமியையும் கட்சியின் இதர உறுப்பினர்களையும் பார்த்து வர விரும்புகிறேன். நான் ஸ்ரீநகருக்கு 9ஆம் தேதி காலை 9 மணியளவில் சென்றடையத் திட்டமிட்டுள் ளேன். கட்சித் தலைவர் என்ற முறையில் நான் என் பொறுப்புகளை ஆற்றுவதற்கு எவ்விதத் தடையையும் உங்கள் நிர்வாகம் உருவாக்காது என்று நம்புகிறேன். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத்தில் எழுதியுள்ளார். (ந.நி.)