internet

img

மேக்புக் மாடல்களை திரும்பப் பெறும் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனத்தின், சில மேக்புக் ப்ரோ மாடல்களின் பேட்டரி அதிக சூடாகி தீப்பிடித்து எரியும் அபாயம் இருப்பதால் அவற்றை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 கடந்த செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் 15 இன்ச் மேக்புக் மாடல்கள் சிலவற்றில் பேட்டரி அதிக சூடாகி தீப்பிடித்து எரியும் அபாயம் இருப்பதை கண்டறிந்தது. இந்நிலையில், அவற்றை திரும்பப் பெறுவதாகவும், அபாயம் உள்ள லேப்டாப்களை சீரியல் நம்பர் மூலம் கண்டறிந்து கொள்ளலாம் என ஆப்பிள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் மேக்புக் ப்ரோ (ரெட்டினா, 15 இன்ச் ) மாடல்களை வைத்திருப்பவர்கள் தங்களது சாதனம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய, திரையின் இடதுபுறம் மேல்பக்கமாக இருக்கும் ஆப்பிள் மெனுவை க்ளிக் செய்து, மேக்புக்கின் சீரியல் நம்பரை அதற்கென வழங்கப்பட்டு இருக்கும் பகுதியில் பதிவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் பேட்டரியை மாற்றிக் கொள்ள முடியுமா என தெரிந்து கொள்ளலாம். 
 

;