internet

img

அப்டேட் தகவல்கள் வாட்ஸ்அப் குழுவில் புது வசதி

===என்.ராஜேந்திரன்===
குரூப்களில் புதிய பிரைவசி செட்டிங்கை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. குரூப்பில் யார் இணைக்கப் பட வேண்டும். யார் இணைக்கப்பட வேண்டாம் என அனைத்தையும் குரூப் அட்மின்களே தீர்மானம் செய்து கொள்ளலாம். மேலும், இன்வைட் ஃபீயூச்சர் வசதி மூலம் ஒருவரை நேரடியாக இனி குரூப்பில் சேர்க்க முடியாது.அந்நபரின் அனுமதி பெற்ற பின்னரே குரூப்பில் அவரை இணைக்க முடியும்.
குரூப் பிரைவசி செட்டிங்ஸ் அமைக்க செட்டிங்ஸ் மெனுவில் அக்கௌண்ட் என்பதில் நுழைந்து பிரைவசிவழியாக குரூப்ஸ் தேர்வு செய்யவும். அதில் நோபடி / மை காண்டாக்ட்ஸ் / எவ்ரி ஒன் என்ற மூன்று தேர்வுகளில் உங்களுக்கு தேவையானதை செலக்ட் செய்யவும்.

நோபடி என்பதைத் தேர்வு செய்திருந்தால், உங்களின் அனுமதி இன்றி குரூப்களில் இணைக்க முடியாது.மை காண்டாக்ட்ஸ்- என்பதை தேர்வு செய்திருந்தால்,உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டும் உங்களை குரூப்களில் இணைக்கலாம்.இந்த மூன்று தேர்வுகளில் எவ்ரிஒன் என்பதைத் தேர்வு செய்தால், எந்த குரூப்பிலும், யார் வேண்டுமானாலும் உங்களை இணைக்கலாம். அனுமதி தேவையில்லை.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இனி ஃபேஸ்புக்கில்
வாட்ஸ்அப் செயலில் நீங்கள் பதிவிடும் உங்கள் ஸ்டேட்டஸ் தகவலை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பிற கணக்குகளிலும் ஷேர் செய்யும் வசதி வரவுள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் வாட்ஸ்அப் பீட்டாவில் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் வைக்க முடியும். மேலும், இன்ஸ்டாகிராம், ஜிமெயில், கூகுள் போட்டோஸ் போன்ற மற்ற ஆப்களிலும் கூட, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை ஷேர் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வசதி 24 மணி நேரம் வரையில் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். அதன்பிறகு நீக்கப்பட்டு விடுகிறது. இதே முறைதான் மற்ற ஆப் களிலும் செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

விண்டோஸில் வாட்ஸ்அப் இல்லை
வாட்ஸ்அப் செயலி விண்டோஸ் மற்றும் பழைய ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்காது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதற் கட்டமாக இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலி வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக ஜூலை 1ஆம் தேதி முதல்விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வாட்ஸ்அப் செயலிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால், இனி வாட்ஸ் அப்பை விண்டோஸ் போன்களில் டவுன்லோட் செய்யமுடியாது. ஏற்கனவே, விண்டோஸ் மொபைலில் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு டிசம்பர் மாதம் வரை மட்டுமே வேலை செய்யும்.

அதேபோல ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் பழையபதிப்பான 2.3.7 மற்றும் ஆப்பிள் iOS 7 இயங்குதளங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2020 முதல் வாட்ஸ்அப்இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,இந்த இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள்மூலமாக புதிய வாட்ஸ்அப் கணக்கு எதுவும் தொடங்கமுடியாது. ஏற்கனவே, வாட்ஸ்அப் பயன்படுத்துபவர் களுக்கு அது வேலை செய்யாது. 
உங்களுடையது பழைய ஆண்ட்ராய்ட் போன் என்றால் உங்கள் இயங்குதள பதிப்பு பற்றி அறிந்து கொள்ள செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று, Phone>About என்பதை தேர்வு செய்தால், அதில் ஸ்மார்ட்போன் இயங்குதள பதிப்பு எண் காட்டப்படும். அண்ட்ராய்டு 2.3.7 பதிப்பு எண் இருந்தால் அது அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ்அப் செயல்படாது. ஆண்ட்ராய்டு 4.03 பதிப்பிற்கு பிறகு வெளியானவற்றில் மட்டுமே வேலை செய்யும். வாட்ஸ்அப்பில் புதிய தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்துவதன் காரணமாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

ட்ரூகாலரின்  இணையத் தொலைபேசி சேவை
‘இணைய வழித் தொலைபேசி’ சேவையை அடுத்த மாதத்திலிருந்து வழங்கவுள்ளது ட்ரூகாலர் (Truecaller) செயலி. தற்போது சோதனை செய்யப் பட்டு வரும் இந்த வசதி பணம் செலுத்தும் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தவுள்ளது. வாட்ஸ்அப்பில் தற்போது உள்ள வாய்ஸ் கால் சேவை போலவே இதுவும். மொபைல் நெட்வொர்க் அல்லது ஒய்ஃபீ வசதியைப் பயன்படுத்தி, அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த வசதியை, ‘ட்ரூ காலர் வாய்ஸ்’ (Truecaller Voice) என்ற தனி செயலி மூலமாக அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது ட்ரூ காலர் நிறுவனம். தற்போது, ஆண்ட்ராய்டில் ட்ரூ காலர் செயலியைபயன்படுத்துபவர்களுக்கு ‘ட்ரூ காலர் வாய்ஸ் சார்ட்கட்’ என்ற பெயரில் இந்த வசதி அறிமுகமாகியுள் ளது. விரைவில் ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்டோரிலும் அறிமுகம் செய்யவுள்ளதாக ட்ரூகாலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.