india

img

பிராமணர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி.... எஸ்.சி. எஸ்.டி., ஓபிசி வீரர்களுக்கு அனுமதி மறுப்பு...

ஹைதராபாத்:
இந்தியாவில் அனைத்துப் பகுதி மக்களின் விருப்பத்திற்கு உரிய விளையாட்டாக கிரிக்கெட்தான் இருக்கிறது. ஆனாலும், இந்திய சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இந்திய கிரிக்கெட் இடம்பெற்று ஆடிவிட முடியாது என்பது கசப்பான உண்மையாகவும் இருக்கிறது.

இந்தியக் கிரிக்கெட் அணி, இந்தியகிரிக்கெட் வாரியம் உள்ளிட்டவற்றில் பிராமணர் ஆதிக்கம் நிலவுகிறது என்பது நெடுநாளைய குற்றச்சாட்டாகும்.இந்நிலையில், அந்த குற்றச்சாட்டைஉறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிராமணர்களுக்கு மட்டுமே தனியாக கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு - நடந்து முடிந்திருப்பது அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள பி.எஸ்.ஆர். விளையாட்டு மைதானத்தில், பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டும்கலந்துகொள்ளும் வகையில் கிரிக்கெட்டோர்னமெண்ட் ஒன்று அங்கீகாரம்பெற்ற கிளப்புகளால் நடத்தப்பட்டுள் ளது.  அந்த சுவரொட்டியில், போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் தாங்கள் பிராமணர்கள்தான் என்பதற்கான அடையாள சான்றுகளை எடுத்துவர வேண்டும்என்பதுடன், பிராமணர் தவிர்த்து எஸ்.சி,. எஸ்.டி., ஓபிசி உள்ளிட்ட ஏனைய பிரிவினருக்கு அனுமதியில்லை எனவும் பகிரங்கமாக சாதியப் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.இதனை பலரும் தற்போது கண்டிக்கத் துவங்கியுள்ளனர். 1950-இல் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டம், சாதிய அடிப்படையில் பாகுபாட்டை தடை செய்கிறது. அதற்கு தண்டனையும் வழங்குகிறது. அவ்வாறிக்கையில் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமான கிரிக்கெட் போட்டியை அங்கீகாரம்பெற்ற நிறுவனங்கள் எப்படி முன்னின்று
நடத்தின? என்று அவர்கள் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

;