india

img

மொபைல் ரீசார்ஜ்களுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ,2 வசூல் – ஃபோன்பே நிறுவனம்  

50 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள UPI அடிப்படையிலான பரிவர்த்தனைகளுக்கு ஃபோன்பே செயலாக்கக் கட்டணம் வசூலிக்கிறது.    

வால்மார்ட்டுக்குச் சொந்தமான டிஜிட்டல் பேமெண்ட் செயலி ஃபோன்பே இப்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கும். இனி வரும் காலங்களில் 50 ரூபாய்க்கு மேல் மொபைல் ரீசார்ஜ் செய்பவர்களிடம் செயல்முறை கட்டணம் வசூலிக்கப்படும் என ஃபோன்பே அறிவித்துள்ளது.  

இதுகுறித்து ஃபோன்பே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 50 ரூபாய்க்கு குறைவான ரீசார்ஜ்க்களுக்கு கட்டணம் கிடையாது. ரூ.50 முதல் ரூ.100 வரையிலான ரீசார்ஜ்களுக்கு 1 ரூபாயும், ரூ.100க்கு மேல் 2 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.  

அதனை தொடர்ந்து பல நிறுவனங்கள் ஏற்கனவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளத்தில் சிறிய அளவிலான தொகையை செயல்முறை கட்டணமாக வசூலித்து வருகிறது. நாங்கள் கிரெடிட் கார்ட் மூலம் நடைபெறும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு மட்டும் தான் கட்டணம் வசூலிக்கிறோம்.

மேலும் ஃபோன்பே மூலமாக மேற்கொள்ளப்படும் பிற பரிவர்த்தனைகள் மற்றும் பணப்பரிமாற்றங்களுக்கு எந்தவித கட்டணம் வசூலிக்கப்படாத நிலையே தொடரும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

;