india

img

புதிய வைரஸின் மரபணுவை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்....

புனே:
இங்கிலாந்தில் உருமாற்றமடைந்து பரவும் புதிய கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வைரசின் மரபணுவை இந்திய விஞ்ஞானிகள் பிரித்தெடுத்துள்ளனர்.

பிரிட்டனில் கொரோனா வைரஸின்மரபணு மாறி, புதிய வகை கொரோனா உருவானது. இந்தியாவில் இதுவரை29 பேர் புதிய வகை கொரோனா வைரஸால்பாதிக்கப்பட்டி ருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கொரோனா வைரஸின் மரபணு குறித்த ஆராய்ச்சி, உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலகில் முதல் முறையாக புதிய வகை கொரோனா வைரஸின் மரபணுவை தனியாகப் பிரித்தெடுத்துள்ளது. மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த கொரோனா நோயாளிகளின் மாதிரிகளில் இருந்து புதிய வகை வைரஸின் மரபணு பிரித்தெடுக்கப்பட்டுள்ளது.

;