india

img

மகாராஷ்டிராவில் மேலும் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு.... 

மும்பை
நாட்டின் கொரோனா மையமாக உள்ள மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு சராசரியாக 50 ஆயிரதத்துக்கு மேல் இருந்த நிலையில், ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 2 நாட்களாக அங்கு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து  வருகிறது. குறிப்பாக தலைநகர் மண்டலமான மும்பையில் கொரோனா பரவல் வீரியம் வெகுவாக குறைந்து வருகிறது.

இதற்கு காரணம் அம்மாநில அரசு கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவுப்பு தான். இந்த ஊரடங்கு வரும் 30-ஆம் தேதி நிறைவு பெறும் நிலையில், கொரோனா பரவல் வேகத்தை முற்றிலுமாக குறைக்க மேலும் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை ராஜேஷ் டோப் அறிவித்துள்ளார். 

அதாவது மே 1-ஆம் தேதியிலிருந்து மே 15-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில  முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டள்ளது. 

;