india

img

மகாராஷ்டிராவில்  12 பாஜக எம்எல்ஏக்கள் ஓராண்டுக்கு இடைநீக்கம்....  

மும்பை:
மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் திங்களன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் தற்போது சபாநாயகர் இல்லை. சபாநாயகர் பதவியில் இருந்த பட்டோலி ராஜினாமா செய்ததால், இடைக்கால சபாநாயகராக பாஸ்கர் ஜாதவ் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், சட்டசபையின் இடைக்கால சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் அலுவலகத்திற்கு வந்து 12 பாஜக எம்.எல்.ஏக்கள் ஆர்ப்பாட்டம்நடத்தியுள்ளனர். மேலும் அந்த சமயத்தில் அமளியில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பராக் அலவானி, ராம் சத்புட், சஞ்சய் குட், ஆஷிஷ் ஷெலார், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அதுல் பட்கல்கர், ஷிரிஷ் பிம்பிள், ஜெய்குமார் ராவல், யோகேஷ் சாகர், நாராயண் குச்சே மற்றும் கீர்த்திகுமார் பகடி ஆகிய 12 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். ஏற்கனவே அரசுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் நிதி பற்றாக்குறை இருக்கும் சூழ்நிலையில், 155 கோடி ரூபாய் விளம்பரத்துக்கு மட்டும் செலவிட்டு இருப்பதாக குற்றம்சாட்டி பாரதிய ஜனதா கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இத்தகைய சூழலில், தற்போது 12 பாஜக எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

;