india

img

மகாராஷ்டிரா விவசாயிகள் தில்லி நோக்கி செங்கொடிப் பயணம்... மத்தியப்பிரதேசம், பீகாரில் எழுச்சிமிகு வரவேற்பு...

நாசிக்:
தில்லியில் 28 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிரத்திலிருந்து செங்கொடி ஏந்திய ஆயிரக்கணக்கான விவசாயிகள் வழிநெடுகிலும் லட்சக்கணக்கான விவசாயிகளைச் சந்தித்து பிரச்சாரம் செய்தவாறு தில்லியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகாராஷ்டிர மாநிலக்குழு சார்பில் 50க்கும் மேற்பட்டவாகனங்களில் பல்லாயிரக் கணக்கான  விவசாயிகள், சங்கத்தின் அகில இந்தியத் தலைவரும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் அசோக் தாவ்லே தலைமையில் இந்த எழுச்சிமிகு போராட்டப் பிரச்சாரப் பயணம் சென்று கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாநகரில் துவங்கி தில்லி நோக்கிச் செல்லும் இந்தப் பயணம் முதல் நாளான டிசம்பர் 21 திங்களன்று மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் விவசாயிகளைச் சந்தித்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டது. 

இரண்டாவது நாளான செவ்வாயன்று மத்தியப்பிரதேச மாநிலத்திற் குள் நுழைந்த இந்த எழுச்சிமிகுப் பிரச்சாரப் பயணம் சந்த்வாத், மாலேகான், துலே, ஷிர்பூர் ஆகிய மாவட்டங் கள் வழியாக நூற்றுக்கணக்கான கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை சந்தித்தது. அனைத்துஇடங்களிலும் விவசாயிகளின் பயணத்திற்கு பெரும் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் அனைத்துக் கட்சிகளும் - சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சமாஜ்வாதி, மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன்சமாஜ் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எனஅனைத்து கட்சிகளின் தலைவர்கள், விவசாயிகள் சங்கங்களின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள், நிர்வாகிகள் என செல்லும் இடமெல்லாம் மகாராஷ்டிர விவசாயிகளுக்கு பெரும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மூன்றாவது நாளான மத்தியப்பிர தேசத்தில் டிசம்பர் 23 புதனன்று மத்திய பிரதேசத்தின் எல்லையில் சமூக ஆர்வலரான மேதா பட்கர் தலைமையில் அவரது நர்மதா பச்சோ அந்தோலன் அமைப்பின் சார்பில்நூற்றுக்கணக்கான செயற்பாட்டா ளர்கள் விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.மூன்றாவது நாளில் பீகார் மாநிலத்தின் சமஸ்டிப்பூர், விபூதிப்பூர்உள்ளிட்ட பகுதிகளை மகாராஷ்டிர விவசாயிகளின் பிரச்சாரப் பயணம் எட்டியது. விபூதிப்பூரில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற எழுச்சிமிகு பொதுக்கூட்டம் நடைபெற்றது.தில்லி விவசாயிகளோடு சங்கமிப்பதற்காக சென்று கொண்டிருக்கும் மகாராஷ்டிர விவசாயிகள் இந்த செங்கொடிப் பயணத்திற்கு டாக்டர் அசோக் தாவ்லே மற்றும் விவசாயிகள் சங்க மகாராஷ்டிர மாநில தலைவர்கள் கிஷான் குஜார், டாக்டர் அஜித் நவாலே, சுனில் மலுசாரே, இர்பான் சேக், டாக்டர் உதய்நர்கர், முன்னாள்சட்டமன்ற உறுப்பினரும் மாநிலத்தலைவருமான ஜே.பி.கேவிட்உள்ளிட்ட தலைவர்கள் தலைமை யேற்றுள்ளனர். 
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாசிக் நகரிலிருந்து மும்பை நோக்கி நடைபயணமாகவே பல்லாயிரக் கணக்கான விவசாயிகள்  அணிதிரண்டு சென்று வரலாற்றில் இடம்பிடித்த எழுச்சிமிகுப் போராட்டத்தை நடத்திய மகாராஷ்டிர விவசாயி களின் தற்போதைய தில்லி நோக்கியசெங்கொடிப் பயணம், அனைத்து மாநில விவசாயிகள் மத்தியிலும் எதிர்பார்ப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

;