india

img

எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் 7 வயது சிறுவன் பலி

மும்பையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் அவ்வப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து வெடிப்பதால் தீ விபத்து ஏற்படுகிறது.  இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை சார்ஜ் செய்யும் போது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது.   இந்த சம்பவத்தில் ஷபீர் ஷாநவாஸ் என்ற 7 வயது சிறுவன் பலத்த காயமடைந்தான். 
உடனடியாக அந்த சிறுவன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானான்.  இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;