india

img

டெங்கு காய்ச்சலுக்கு 650 மி.கி பாராசிட்டமாலாம்! - உத்தரகாண்ட் முதல்வர் கண்டுபிடிப்பு

டெங்கு காய்ச்சக்கு, 500 மி.கி பதிலாக 650 மி.கி பாராசிட்டமால் மாத்திரை சாபிட்டால், நோய் குணமாகிவிடும் என உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கொசுக்களால் பரவும் நோயான டெங்கு காய்ச்சலால், உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு 4800 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  டெராடூனில் மட்டும் 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹல்த்வானியில் 1,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், டெராடூனில் டெங்கு காய்ச்சல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ராவத், ”உத்திரகாண்ட் மாநிலத்தில், டெங்கு காய்ச்சலால் அதிகமாக பரவி வருகிறது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் யாரும் பயப்பட வேண்டாம். வழக்கமாக காய்ச்சலுக்கு சாப்பிடும் 500 மில்லி கிராம் பாராசிட்டமால் மாத்திரைக்கு பதிலாக 650 மில்லி கிராம் அளவிலான பாராசிட்டமால் மாத்திரையை சாப்பிட்டு, சிறிது ஓய்வு எடுத்தால், நோய் குணமாகிவிடும்” என்று பேசியுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 

;