india

img

உ.பியில் ரயில் முன் பாய்ந்து தொழிலாளர் தற்கொலை

உத்தரப் பிரதேசத்தில், வேலையிழந்த தொழிலாளர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்தவர் பானு பிரகாஷ் குப்தா (50 வயது). இவர் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அவர் நீண்ட நாட்களாக வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால், அவரது கையில் பணம் இல்லாமல் கடந்த சில நாட்களாக தவித்து வந்துள்ளார். இந்த நிலையில், விரக்தி அடைந்த பானு பிரகாஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், பானு பிரகாஷின் உடல் ரயில் தண்டவாளத்தில் கிடைத்துள்ளது. அவரது சட்டை பையில் தற்கொலைக்கான காரணத்தையும் அவர் எழுதி வைத்துள்ளார். அதில், தனது வீட்டில் கோதுமையும், அரிசியும் உள்ளது. ஆனால், அவை மட்டும் இருந்தால் போதாது. அதை தவிர்த்து சர்க்கரை, பால், உப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தன்னிடம் போதிய பணம் இல்லை என்றும், வயது முதிர்ந்த, உடல்நலம் முடியாத நிலையில் உள்ள தனது தாயாருக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாதது, தனக்கு கடும் வேதனை அளிப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் அவருக்கு உதவவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 
 

;