india

பெகாசஸ் மூலம் பத்திரிகையாளர்களை உளவு பார்க்கும் ஒன்றிய அரசு

‘தி ஒயர்’ செய்தித்தளத்தின் நிறு வன ஆசிரியர் சித்தார்த் வரத ராஜன் மற்றும் இன்னொரு  பத்திரிகையாளரும்  இஸ்ரேல் நாட்டு  நிறுவனத்தால் விற்பனை செய்யப் படும் பெகாசஸ் உளவுசெயலியால் குறிவைக்கப்பட்டனர் என்று சர்வதேச  பொது மன்னிப்புக் கழகம் (அம்  னெஸ்ட்டியின் ‘பாதுகாப்பு சோத னைச்சாலை’) அறிவித்துள்ளது. அவர்களிருவரும் அரசாங்கம் பணித்த மென்பொருள் தாக்குதலுக்கு இலக்  காகியுள்ளார்கள் என்று  ஆப்பிள் நிறுவனம் எச்சரித்ததை ஒட்டி தங்கள்  கைபேசிகளை அந்த சோதனைச் சாலைக்கு அவர்கள் அனுப்பி வைத்  தார்கள். பெகாசசை உருவாக்கிய  இஸ்ரேல் நிறுவனமான என்எஸ்ஓ (NSO) அரசாங்கங்களுக்கு மட்டுமே அந்த தொழில்நுணுக்கத்தை விற்கி றது என்பது குறிப்பிடத்தக்கது. 2017இல் இந்திய இன்டெலிஜென்ஸ் பிரோ, என்எஸ்ஓ குழுமத்திடமிருந்து கணினிப் பொருட்களை வாங்கியதாக வும் வணிக தரவுகள் காட்டுகின்றன. இதை இந்து பத்திரிகை பல்வேறு அதிகாரிகளின் நேர்காணல் மூலம் உறுதி செய்தது. பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கவோ அல்லது  பயன்படுத்தவோ இல்லை என்று  ஒன்றிய அரசு இதுவரை மறுக்க வில்லை.

அகில இந்திய தொழில்நிபு ணர்கள் பேராயத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தியும் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் கூறு கிறது. அவரது கைபேசியை சைபர்  பாதுகாப்பு நிறுவனமான ஐ வெரிஃபை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது.

பாதுகாப்புத் துறையின் புல னாய்வு இயக்குநரகம் காக்னைட் எனும் நிறுவனத்திடமிருந்து சில  கருவிகளை வாங்கியதாக இந்து பத்தி ரிகை ஏப்ரல் மாதம் தெரிவித்தது. இந்த  நிறுவனமும் இத்தகைய உளவு வேலை கள் பார்த்ததாக அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அதானி குறித்து கேள்வி கேட்டவர் மீது உளவு பார்ப்பா?
வரதராஜனை தவிர OCCRP எனப்  படும் குற்றங்கள் குறித்த அறிக்கை  திட்டத்தின் தெற்காசிய ஆசிரியர் ஆனந்த் மாங்நாலேயின் கைபேசி யிலும் உளவு மென்பொருள் பயன் படுத்தப்பட்டது. தாங்கள் புலனாய்வு செய்து கொண்டிருக்கும் ஒரு திட்டம் குறித்து அதானி குழுமத்திற்கு சில  கேள்விகளை அனுப்பியதாக ஆனந்த்  கூறியுள்ளதையும் பார்க்க வேண் டும்.

திசைதிருப்பும் உத்திகள்
இதற்கிடையில் ஆப்பிள் நிறு வனம் அக்டோபரில் எச்சரிக்கை அனுப்பியபின், அரசாங்க அதிகாரி கள் இந்த எச்சரிக்கை எதிர்க்கட்சி  தலைவர்களுக்கும் பத்திரிகையா ளர்களுக்கும் ஏன் அனுப்பப்பட்டது என்பதற்கு வேறு காரணங்கள் கூறு மாறு ஆப்பிள் நிறுவனத்திற்கு நெருக் கடி கொடுத்ததாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ தெரிவித்தது. அதன்படி அரசாங்க அதிகாரிகளும் ஆப்பிள் நிறுவனமும் ‘இந்த எச்சரிக்கை 150 நாடுகளுக்கு அனுப்பப்பட்டது’ போன்ற ஆதாரமற்ற திசை திருப்பும்  விதமான விளக்கங்களை வெளி யிட்டுக்கொண்டிருந்தன. 2021இல் பெகாசஸ் விவகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கும் அர சாங்கம் ஒத்துழைக்க மறுத்தது.

பெகாசஸ் எனும் பகாசுரன்
தாக்குதல் நடத்துபவர்கள் இந்த மென்பொருளை பயன்படுத்தி ஒருவ ரின் கைபேசியிலுள்ள ஒட்டு மொத்த  விசயங்களையும் எடுக்க இயலும். முற்றிலும் அண்மைக்கால மென் பொருள் கொண்ட கைபேசியிலும் இந்த தாக்குதல்களை நடத்த முடி யும். ஒருவர் கைபேசி கேமிரா மற்றும்  மைக்ரோபோன் பயன்படுத்தும் போதே ரியல் டைமாக அதை அணுக  முடியும்.

2021வரை பெகாசஸ் மூலம் ஏரா ளமான எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், செயல்பாட்டா ளர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்  கிறது ‘ஃபார்பிடன் ஸ்டோரீஸ்’ எனும்  கூட்டமைப்பு. பெகாசஸ் உளவு மென்பொருளின் உலகளாவிய இலக்குகள் குறித்த ரகசியம் வெளி வந்ததை இந்த அமைப்புதான் தெரி வித்தது.

சட்டவிரோதம்; மனித உரிமை மீறல்
இப்படிப்பட்ட தொழில் நுணுக்கங் களை சட்டவிரோத கண்காணிப்பு என்கின்றனர் அந்தரங்க பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள். “தங்கள் பணி களை செய்வதனாலேயே பத்திரிகை யாளர்களை குறிவைப்பது அவர்  களது அந்தரங்கத்தின் மீதான தாக்கு தல் மட்டுமல்ல; அவர்களது பேச்சுரி மையை மீறுவதாகும். சட்டவிரோத கண்காணிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதன் மூலம் அவர்களது மனித உரிமைகளை பாதுகாக்கும் கடமை இந்தியா உட்பட எல்லா நாடு களுக்கும் உண்டு”என்கிறார் செக்கு யூரிட்டி லேபின் தலைவர் டொன் னாச்சா ஓ சியார்ப்ஹெயில். இந்த  சோதனைச்சாலைதான் உளவுமென் பொருள் தொற்றை வெளிக்கொண்டு வந்தது.

“பத்திரிகையாளர்களின் கைபேசி யிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் 2021 இல் வெளிப்படையாக அடையாளங் காணப்பட்ட என்எஸ்ஓ குழுமத்தின் உளவு மென்பொருளுடன் ஒத்தி ருந்தது. இதையே ஆப்பிள் நிறுவனம்  தனது iOS 16.6.1 திருத்தம் மூலம் சரி செய்தது.” என்கிறது ஆம்னெஸ்ட்டி.

விசாரணை நடக்கும்போதே உளவும் தொடர்கிறதா?
ஆப்பிள் நிறுவனம் ஏராளமான எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பிய எச்சரிக்கைகள் குறித்து  ஒன்றிய அரசாங்கம் விசாரணை செய்துகொண்டிருப்பதாக கூறப்பட்  டது. பெகாசஸின் உளவு மென்பொருள் குறித்து உலகளவில் ஏற்பட்ட பர பரப்பிற்குப் பின் ஒன்றிய அரசு அதற்கு  மாற்றான மென்பொருளை தேடி வரு வதாகவும் கூறப்பட்டது. ஆனால் இன்  னும் தொடர்ந்து அது பயன்பட்டுக் கொண்டிருப்பது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழில்: இரமணன், 
நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ் (29.12.2023)