ஏப்ரல் 19
முதற்கட்டத் தேர்தலில் 102 தொகுதிகள்
மக்களவைத் தேர்தலின் முதற் கட்டத்தில் 21 மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 அன்று தேர்தல் நடைபெறு கிறது. இதில், தமிழ்நாடு (39), புதுச் சேரி (1), சத்தீஸ்கர் (1), மிசோரம் (1), நாகலாந்து (1), சிக்கிம் (1), திரிபுரா (1 தொகுதி), அந்தமான் (1), ஜம்மு காஷ்மீர் (1), மேற்கு வங்கம் (1), உத் தரகாண்ட் (5), உத்தர பிரதேசம் (8), ராஜஸ்தான் (12), மேகாலயா (2), மணிப்பூர் (2), மகாராஷ்டிரா (5), மத்தி யப் பிரதேசம் (6), பீகார் (4), அசாம் (5), அருணாசல பிரதேசம் (2), மேற்குவங் கம் (3) ஆகிய மாநிலங்கள் அடங்கும்.
ஏப்ரல் 26 2ஆம் கட்டத் தேர்தலில்
89 தொகுதிகள்
இரண்டாம் கட்டத்தில் 89 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் அசாம் (5 தொகுதி), பீகார் (5 தொகுதி), சத்தீஸ்கர் (3 தொகுதி), கர் நாடகா (14 தொகுதி), கேரளா (20 தொகுதி), மத்திய பிரதேசம் (7), மகாராஷ்டிரா (8 தொகுதி), மணிப்பூர் (2 தொகுதி), ராஜஸ்தான் (13 தொகுதி), திரி புரா (ஒரு தொகுதி), உத்தர பிர தேசம் (8 தொகுதி), மேற்குவங் கம் (3 தொகுதி), ஜம்மு காஷ்மீர் (1 தொகுதி) அடங்கும்.
மே 7 - மூன்றாம் கட்டத் தேர்தலில் 94 தொகுதிகள்
மூன்றாம் கட்டத்தில் அசாம் (4), பீகார் (5), சத்தீஸ்கர் (7), கோவா (2), குஜ ராத் (26), கர்நாடகா (14), மத்தியப் பிரதேசம் (8), மகா ராஷ்ரா (11), உத்தரப்பிர தேசம் (10), மேற்கு வங்கம் (4), ஜம்மு காஷ்மீர் (1), டாமன் & டையூ, தாத்ரா & நகர் ஹவேலி (2) ஆகிய 12 மாநிலங்களிலுள்ள 94 தொகுதிகளுக்கு மே 7 அன்று வாக்குப் பதிவு நடை பெறுகிறது.
மே 13 - நான்காம் கட்டத்தில்
96 தொகுதிகள்
நான்காம் கட்டத் தில் ஆந்திரப் பிரதேசம் (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலங்கானா (17), உத்தரப் பிரதேசம் (13), மேற்கு வங்கம் (8), ஜம்மு காஷ்மீர் (1) ஆகிய 10 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு மே 13 அன்று தேர்தல் நடை பெறுகிறது.
மே 20 -
ஐந்தாம் கட்டத்தில்
49 தொகுதிகள்
ஐந்தாம் கட்டத்தில் பீகார் (5), ஜார்க்கண்ட் (3), மகாராஷ்ரா (13), ஒடிசா (5), உத்தர பிர தேசம் (14), மேற்கு வங்கம் (7), ஜம்மு காஷ்மீர் (1), லடாக் (1) என 8 மாநிலங்க ளில் 49 தொகுதிகளுக்கு மே 20 அன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மே 25 -
ஆறாம் கட்டத்தில்
57 தொகுதிகள்
ஆறாம் கட்டத்தில் சத்தீஸ்கர் (8), ஹரியானா (10), ஜார்க் கண்ட் (4), ஒடிசா (6), உத்தர பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), தில்லி (7) ஆகிய 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு மே 25 அன்று தேர்தல் நடைபெறுகிறது.
ஜூன் 1 -
ஏழாம் கட்டத்தில்
57 தொகுதிகள்
ஏழாம் கட்டத்தில் பீகார் (8), இமாச் சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரப்பிரதேசம் (13), மேற்கு வங்கம் (9), சத்தீஸ்கர் (1) என 8 மாநி லங்களில் 57 தொகுதிகளுக்கு ஜூன் 1 அன்று வாக்குப் பதிவு நடைபெறு கிறது. இந்த அறிவிப்புகளை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.