india

img

ஜிடிபி கணக்கிடும் முறையை மறு பரிசீலனை செய்யும் ரிசர்வ் வங்கி

2019 -20 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான ஜிடிபி 5 சதவீதமாக உள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஜிடிபி கணக்கீடும் முறையை மறு பரிசீலனை செய்து வருவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

 ரிசர்வ் வங்கியின் கணிப்பின் படி, 2019 - 20 நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது. ஆனால் 2019 -20 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான ஜிடிபி 5 சதவீதமாக வந்த நிலையில், ரிசர்வ் வங்கி கணித்ததை விட மிக மிகக் குறைவான வளர்ச்சி கண்டிருப்பதால், ஜிடிபி கணக்கிடுவதில் என்ன தவறு நடந்து இருக்கிறது எனக் கண்டுபிடிக்க, ஜிடிபி கணக்கிடும் முறையை மறு பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ”2019 -20 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான ஜிடிபி 5 சதவீதமாக இருப்பது, பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. ரிசர்வ் வங்கியின் ஜிடிபி கணக்கிடுவதில் தவறுகள் உள்ளதா என கணக்கீடுகளை மறு பரிசீலனை செய்து வருகிறோம். ரிசர்வ் வங்கி இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சியை இன்னும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியாவின் பணவீக்கம் சார்ந்த கணக்கீடுகளில் ரிசர்வ் வங்கி கிட்டத் தட்ட சரியாக கணக்கிட்டு இருக்கிறது. அதே போல இந்தியாவின் ஜிடிபி தரவுகளையும் மிகச் சரியாக கணக்கிட விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
 

;