india

img

இன்று ‘ரயில்வே’, நாளை ‘ஏர் இந்தியா’...“பிரதமர் மோடி ஒருநாள் இந்த நாட்டையும் விற்பார்”

புதுதில்லி:
நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று, காங்கிரஸ் மக்களவைக்குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அடுத்த 5 வருடத்துக்குள் ரயில்வே துறைக்கு ரூ. 50 லட்சம் கோடி செலவிடப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் சொல்கிறது. ஆனால், முன்னர் சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சராக இருந்த போது ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவிடப்படும் என கூறினாரே? அந்த ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி என்ன ஆனது?ரயில்வே பட்ஜெட்டின் மூலம் நீங்கள் முதலீடுகள் செய்யப்போவதாக சொல்வது, படுப்பதற்கு பாய்கூட இல்லாத, தற்போதைய நிலையில் தூங்குவதற்கு கூடாரத்தை தேடுவது போல இருக்கிறது.

ரயில்வேயின் செயல்பாட்டு விகிதம் கடந்த 2017 - 2018ல் 98.4 சதவிகிதமாகும், இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம் என்ன வெனில், இது அரசு மதிப்பீட்டை விட அதிகமாகும். ஆனால், வருவாய் மற்றும் செலவுகள் அதி காரப்பூர்வ தகவல்களை விட குறைவாக உள்ளது. இதன்மூலம் நீங்கள் கனவுகளை விற்பனை செய்வதை நிறுத்தவில்லை என்பது தெரிகிறது. ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலை போன்ற லாபம் சம்பாதிக்கிற தொழிற்சாலைகளைக்கூட தனியார் மயமாக்க அரசு முயற்சிப்பது சரியல்ல. ரயில்வே என்பது சமூக உறுதிப்பாடு. அது வெறும் வணிக ரீதியிலான அமைப்பு மட்டுமல்ல.பாஜக தலைமையிலான கூட்டணி அரசு, கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்துதொடர்ந்து, அதன் இலக்குகளை அடைய முடியாமல் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. 

விமானத் போக்குவரத்துத் துறை அமைச்சர் ‘ஏர் இந்தியா’வை விற்க திட்டமிட்டுள்ளார். ரயில்வே அமைச்சர், ரயில்வே துறையை தனியார் மயமாக்கத் துடிக்கிறார். பிரதமர் மோடியோ, ஒரு நாள் நாட்டையே விற்கப் போகிறார்.இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

;