india

img

100 நாட்களில் 9 நாடுகளை சுற்றிவந்த பிரதமர் மோடி

10-ஆவதாக அமெரிக்கா புறப்படுகிறார்!

புதுதில்லி, செப்.14- ஐக்கிய நாடுகளின் பொது அவை யில் உரையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 21-ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் செல்கி றார்.  மோடி பிரதமராக 2-ஆவது முறை பதவியேற்று 100 நாட்களை மட்டுமே கடந்துள்ள நிலையில் இதுவரை 9 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். மாலத்தீவு, இலங்கை, பூடான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ் ரைன், பிரான்ஸ், ஜப்பான், கிர்கிஸ் தான், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சுற்றி வந்துள்ளார். இந்த வரிசையில் தற் போது அமெரிக்காவும் இடம்பெற உள்ளது. 7 நாள் அரசு முறைப் பயணமாக, செப்டம்பர் 21-ஆம் தேதி அமெரிக்கா செல்லும் மோடி, அங்கு பல நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து பேசுகிறார். 22-ஆம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்ட னில் அமெரிக்கவாழ் இந்தியர்களுட னும் மோடி கலந்துரையாட உள்ள தாக கூறப்படுகிறது. மோடியின் அமெரிக்கப் பயணம் தொடர்பாக வெளியுறவுத்துறை செய லகம் வெளியிட்டுள்ள தகவலில், செப்டம்பர் 27-ஆம் தேதி ஐக்கிய நாடு களின் பொது அவைக்கூட்டம் அமெரிக்காவில் நடைபெறுவதாகவும், அதில் பங்கேற்கும் மோடி ‘தலைமைப் பண்புகள்’ குறித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்து கொண்டு பேசவுள்ளது குறிப்பிடத்தக் கது.

;