india

மரு. வி. மோகனுக்கு மதிப்புமிக்க விருது

சென்னை, டிச. 8 -  நீரிழிவு நோய்க்கான ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்புகளை வழங்கி யதை பாராட்டும் வகையில் டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர். வி. மோக னுக்கு லக்ஷ்மிபத் சிங்கா னியா விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

புதுதில்லியில் உள்ள  விக்யான் பவனில் வெள்ளி யன்று (டிச,8)  நடந்த ஐஐஎம் லக்னோ தேசிய தலைமை விருதுகள் 2022-23 விழாவில் ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தலைவர்’ என்ற பிரிவில் இந்த விருதை பெறும் இரண்டாவது இந்திய மருத்துவர் என்ற பெருமை யையும் டாக்டர் மோகன் பெற்றுள்ளார். 

இந்த விருது கிடைத் திருப்பது குறித்து டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக் கட்டளையின் தலைவர் டாக்டர். வி. மோகன் பேசுகை யில், இந்த விருதை ஜனாதி பதி திரவுபதி முர்முவிடம் இருந்து பெறுவது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சர்க்கரை நோய் குறித்த எங்கள் ஆராய்ச்சிக்கு இந்த மதிப்பு மிக்க விருது கிடைத்திருப் பது என்பது எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது.

டாக்டர் வி. மோகன் 50 ஆண்டுகளுக்கும் மேலான தனது பயணத்தில், 1635 மருத்துவ கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இதில்  1052 கட்டுரைகள் முக்கிய  ஆராய்ச்சிகள் தொடர்புட வையாகும்.