india

img

நோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு உடையவராம்

புனே:
“2019-ஆம் ஆண்டிற்கான பொருளாதார நோபல் பரிசை வென்றுள்ள அமெரிக்கவாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி, கம்யூனிச சித்தாந்தச் சார்புடையவர். அவருடைய சிந்தனையில் இடதுசாரிகளின் தாக்கம் முழுமையாக உள்ளது” என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பியூஷ் கோயல் மேலும் கூறியிருப்பதாவது:“நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் சிந்தனை முற்றிலும் இடது சாய்வு கொண்டுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதுமட்டுமல்ல, அபிஜித் பானர்ஜி முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘நியாய்’ என்ற வறுமை ஒழிப்புத் திட்டத்தை ஆதரித்தவர். இந்திய மக்கள் அவரது சித்தாந்தத்தை நிராகரித்து விட்டனர்.ஒரு இந்தியருக்கு நோபல் பரிசு கிடைத்ததில் நான் பெருமைப்படுகிறேன், ஆனால் அவருடைய யோசனைகளுடன் நான் உடன்படவேண்டிய அவசியமில்லை. குறிப்பாக இந்தநாட்டு மக்கள் அவரது ஆலோசனையை நிராகரித்து விட்ட பிறகு, அவருடைய கருத்துக் களை நாங்கள் ஏற்கத் தேவையில்லை என்றுநினைக்கிறேன்.” இவ்வாறு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

;