india

img

வறட்சி மிகுந்த மாதமாக கடந்து சென்றது ஜுன்

புதுதில்லி:
இந்த ஆண்டின் ஜூன் மாதமானது, கடந்த ஐந்து ஆண்டுகளைக் காட்டிலும் வறட்சி மிகுந்தது என வானிலை மைய ஆய்வு கூறியுள்ளது.

தென்மேற்கு பருவமழையானது ஜூலை ஒன்றாம் தேதிக்குள்ளாக நாடு முழுவதும் தீவிரம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் கூட தீவிரம் அடையவில்லை என்று வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.சராசரியைக் காட்டிலும் 33 விழுக்காடு குறைவாகவே ஜூன் மாதத்தில் பருவமழை பெய்துள்ளது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் சராசரியைக் காட்டிலும் ஓரளவு குறைவாகவே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மழை தீவிரம் அடையவில்லை என்றால், அறுவடை பாதிக்கப்பட்டு உள்நாட்டு தேவை அதிகரித்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மொத்த விளை நிலங்களில் பாதிக்கும் மேல் மழைப்பொழிவை நம்பியே உள்ள நிலையில், பருவமழை தீவிரம் அடையாமல் இருப்பது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது. 2014ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தில் 42 விழுக்காடு குறைவாக மழைப் பொழிவு பதிவானது குறிப்பிடத்தக்கது.

;