கடந்த அக்டோபர் மாதத்தில், நகர்ப்புறங்களில் வேலையின்மை 7.77% ஆகவும், கிராமப்புறங்களில் 8.04% ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (CMIE) தரவுகளின் படி, நகர்ப்புறங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 7.21% ஆக இருந்த வேலையின்மை அக்டோபர் மாதத்தில் 7.77 % ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கிராமப்புறங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 5.84% ஆக இருந்த வேலையின்மை அக்டோபர் மாதத்தில் 8.04% ஆக உயர்ந்துள்ளது.