புதுதில்லி:
தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக 23 ரயில்கள் தாமதமாகின. தில்லி, உத்தரப்பிரதேசம்,ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் கடுமையாக காணப்படுகிறது. பனி மூட்டத்தால் சில மீட்டர் தொலைவு தூரமே கண்ணுக்கு புலப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். பனிமூட்டம் காரணமாக 23 ரயில்கள் தாமதமாக வருவதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.