india

img

டெல்லியில் போலி இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த கும்பல் சிக்கியது

டெல்லி என்சிஆரில், போலி இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த 15 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கவுதம்பூத் நகர் மற்றும் காஸியாபாத் நகர் போலீசார் ஒரு குழுவாக இணைந்து, டெல்லி இந்திராபுரத்தில் உள்ள ’என்சிஆர் இன்ஷூரன்ஸ் பாலிசி’ என்ற பொலி இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு, 3 பெண்கள் உட்பட 15 பேரை கடந்த 1-ஆம் தேதி கைது செய்துள்ளனர். இந்த கும்பலில் பெரும்பாலானவர்கள் காஸியாபாத் மற்றும் டெல்லி வசிப்பவர்கள். மேலும் அவர்களிடம் இருந்து, 36 மொபைல் போன்கள், 28 டெபிட் கார்கள், 6 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பஞ்சாப்பை சேர்ந்த ஹர்ஜித் சிங், எல்.ஐ.சியில் லாபகரமான பாலிசி என்று கூறி பல பாலிசிகளை வாங்கியதாகவும், இதன் மூலம் அவர் ஏமாற்றப்பட்டதாகவும் கவுதம்பூத் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த கும்பல் சுமார் 500க்கும் மேற்பட்ட பாலிசிகளை வாங்கி இருப்பதாகவும், இதன் மூலம் பல லட்சம் ரூபாய்க்கு மேல் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்றும் ஐன்எஸ் தெரிவித்துள்ளது.

;