india

img

தில்லி பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் இன்று முதல் அமல்

தில்லி பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தில்லி அரசு போக்குவரத்துக்கு உட்பட்ட பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் பெண்கள் இலவச பயணம் செய்வதற்கான திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கடந்த ஜூன் மாதம் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இதற்கான அனுமதியை தில்லி போக்குவரத்து துறை நேற்று வழங்கியது. இந்நிலையில், தில்லி பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேலும், பெண்களுக்கான இந்த திட்டத்தில், 1.5 கோடி பிங்க் பாஸ்கள் (Pink Passes) அச்சடிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த பாஸ்களை பேருந்துகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

;