india

img

கோவின் இணையதளம் மூலம் தனிப்பட்ட தகவல்கள் கசிவு!

ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் பதிவு செய்து கோவிட் தடுப்பூசி செலுத்தியவர்களின் தனிப்பட்ட தகவல்கள் டெலிகிராமில் கசிந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் பெற்றுக்கொள்ள கோவின் இணையதளம் மற்றும் செயலியை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தியவர்களின் பெயர், செல்போன் எண், ஆதார் எண், பாஸ்போர்ட் எண், பிறந்த தேதி, வீட்டு முகவரி, தடுப்பூசி செலுத்திய இடம் உள்ளிட்ட தகவல்கள் டெலிகிராமில் கசிந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம், அவரது மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்துள்ளன.
 

;