india

img

இந்தியாவுக்கு வரும் நேபாள நாட்டினருக்கு விசா நிபந்தனைகள் அறிவிப்பு

இந்தியாவுக்கு வரும் நேபாள நாட்டினருக்கு புதிய விசா நிபந்தனைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நேபாள நாட்டைச் சேர்ந்த 40 லட்சம் பேர் இந்தியாவில் தங்கி கல்வி பயின்றும், வேலை செய்தும் வருகின்றனர். இந்தியா மற்றும் நேபாள நாட்டினர், பரஸ்பரம் இரு நாடுகளுக்கும் செல்ல விசா தேவை இல்லை. ஆனால், சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான பிரச்சனைகள் காரணமாக இந்தியாவுக்கு வரும் நேபாள நாட்டினருக்கு புதிய விசா நிபந்தனைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் வழியாக இந்தியா வரும் நேபாள நாட்டினர் கட்டாயமாக விசா வைத்திருக்க வேண்டும் என்றும், அதே சமயம் மாலத்தீவுகள் வழியாக இந்தியாவுக்கு வரும் நேபாள நாட்டினருக்கு விசா தேவையில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு, நேபாள நாட்டினருக்கு கவலை ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இந்தியா வரும் நேபாள நாட்டினரிடம் விசா கேட்பது தேவையற்றது என்றும், இந்திய அதிகாரிகள் உடனான சந்திப்பின் போது இந்தப் பிரச்சனையை எழுப்ப நேபாள தூதரகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 

;