india

img

காஷ்மீர் விவகாரம் : பிரிட்டன் எம்.பி தில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்த பிரிட்டன் எம்.பி டெபி ஆப்ரஹாம்ஸ், தில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 ஆவது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்து, அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதை அடுத்து, தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு, முன்னாள் முதல்வர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இந்திய அரசின் இந்த நடவடிக்கையை, கடந்த ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான டெபி ஆப்ரஹாம்ஸ் விமர்சித்திருந்தார். 

இந்த நிலையில், அவர் நேற்று இந்தியாவின் தலைநகர் தில்லி வந்தடைந்த போது, டெபியின் விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவரிடம் அதிகாரிகள் தெரிவித்து, அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர் துபாய் விமானத்தில் திரும்பிச்சென்றார். ஜம்மு காஷ்மீரை பார்வையிடும் பிரிட்டன் எம்.பி.க்கள் குழுவின் தலைவரான அவர், தான் ஒரு குற்றவாளியை போல நடத்தப்பட்டதாக விமர்சித்துள்ளார். மேலும், எதற்காக அவருக்கு விசா மறுக்கப்பட்டது என்பது குறித்து, இந்திய அதிகாரிகளிடம் கூடுதல் விளக்கம் கேட்டு வருவதாக பிரிட்டன் தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;