5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய அமைச்சர்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் நடந்துள்ளது.
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத் சிங் படேல், ரேனுகா சிங் ஆகியோரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்ற நிலையில், அவர்கள் வகித்த வேளாண் அமைச்சகம் அர்ஜுன் முண்டாவுக்கும், உணவு உற்பத்தி தொழில் இணையமைச்சகம் ஷோபா கராண்ட்லேஜேவுக்கும், ஜல் சக்தி இணையமைச்சகம் ராஜீவ் சந்திரசேகருக்கும், பழங்குடியினர் நலன் இணையமைச்சகம் பாரதி பிரவினுக்கும் கூடுதல் பொறுப்புகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.