india

img

புதிய ஆளுநர்கள் நியமனம் - மாற்றம்

புதுதில்லி:
பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பீகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த லால்ஜி காண்டன் மத்தியப் பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பீகார் மாநிலத்துக்கு பாகு சௌகான் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், உத்தரப்பிரதேச மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக ஜக்தீப் தன்கர், நாகலாந்து மாநில ஆளுநராக ஆர்.என்.ரவி மற்றும் திரிபுரா மாநில ஆளுநராக ரமேஷ் பயாஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

;