சிக்கிமில் ராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 16 ராணுவ வீரர்கள் மரணமடைந்துள்ளனர்.
சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஒன்று ஒரு கூர்மையான திருப்பத்தை கடந்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 16 ராணுவ வீரர்கள் மரணமடைந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு வடக்கு வங்காளத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.