india

img

தன்பாத் நீதிபதி மரணம்: 243 சந்தேக நபர்களை காவல்துறை விசாரித்தனர் .

ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் மாவட்டத்தில் நீதிபதி உத்தம் ஆனந்த் ஜூலை 28 ஆம் தேதி காலை ஓட்டத்திற்கு வெளியே சென்றபோது ஆட்டோ ரிக்ஷா மோதி உயிரிழந்தார். இது திட்டமிட்டபடி செய்த கொலை வழக்காக அம்மாநில நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

 இந்த வழக்கை விசாரிக்க ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது .இதில் சுமார் 243 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பல்வேறு சம்பவங்களில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். 53 ஹோட்டல்கள் சோதனை செய்யப்பட்டன சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவையும் பறிமுதல் செய்தனர் . மேலும் , இறந்த நீதிபதி குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவாதம் அளித்ததன் பேரில் இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணைக்கு ஜார்க்கண்ட் அரசு பரிந்துரைத்துள்ளது. 

;