india

img

2022-23-ல் இந்தியாவின் ஜி.டி.பி 7 சதவிகிதமாக சரியும் - ஃபிட்ச் நிறுவனம் கணிப்பு

நடப்பு நிதியாண்டில் (2022-23) இந்தியாவின் ஜி.டி.பி 7 சதவிகிதமாக சரியும் என்று ஃபிட்ச் நிறுவனம் கணித்துள்ளது.

கடன் மதிப்பீடு மற்றும் பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளும் சர்வதேச நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங், நடப்பு 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 7 சதவிகிதமாக சரியும் என்று கணித்துள்ளது.  அதேபோல், அடுத்த நிதியாண்டில் (2023-24) இந்தியாவின் ஜி.டி.பி 6.7 சதவிகிதமாக குறையும் என்று தெரிவித்துள்ளது. இதுவே முன்னதாக நடப்பு 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 7.8 சதவிகிதமாக இருக்கும் என்றும், அடுத்த நிதியாண்டில் (2023-24) இந்தியாவின் ஜி.டி.பி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.