india

img

சட்டமன்றத் தேர்தல்களில் பிரதான கவனம் செலுத்துவோம்.... சிபிஎம் மத்தியக் குழு அழைப்பு....

புதுதில்லி:
வரவிருக்கும் நாட்களில் கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு, அசாம் மற்றும்புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் முற்றாகவீழ்த்துவதற்கான நடவடிக்கைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதானகவனம் இருக்கும் என்று  கட்சியின் மத்தியக்குழு கூறியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் ஜனவரி 30-31 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இதுதொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:கட்சியின் அனைத்துக் கிளைகளும் 2021 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நாடு முழுதும் பதினைந்து நாள் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மத்தியக் குழு முடிவு செய்துள்ளது.மதவெறி நஞ்சை ஊட்டி இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதற்காகவும், பொருளாதார அடித்தளங் களை அழிப்பதற்காகவும், நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதற்காகவும், மிகப் பெரிய அளவில் தனியார்மயத்தைக் கொண்டுவருவதற்காகவும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும், விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக்கட்டி, அவற்றை முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றி இருப்பதற்கு எதிராகவும், பாய்ச்சல் வேகத்தில்சென்றுகொண்டிருக்கும் வேலை யில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராகவும் பிரச்சாரம்மேற்கொள்ளும் விதத்தில் இது அமைந்திடவேண்டும். 

அதே சமயத்தில் தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் விதத்திலும், ஆர்எஸ்எஸ்/பாஜக பரப்பிவரும் பொய்ப்பிரச்சாரங்களைத் தோலுரித்துக் காட்டும் விதத்திலும் இது அமைந்திட வேண்டும்.கட்சி, தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள் மற்றும் அனைத்துத்தரப்பு மக்களின் ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளை அதிகரித்திடும் விதத்திலும், போராட்டங்களில் மக்களில் பெரும் திரளானவர்களை அணிதிரட்டிட வேண்டும்.   வரவிருக்கும் காலங்களில் கட்சியின் பிரதான கவனம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவை முறியடித்திடுவதையும், கேரளாவில் மீண்டும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைமையிலான இடது ஜனநாயகமுன்னணி அரசாங்கம்  அமைக்கப்படுவதை உத்தரவாதப்படுத்திடு வதையும், மேற்கு வங்கத்தில் ஓர் இடதுசாரி, மதச்சார்பற்ற ஜனநாயக மாற்றைக் கொண்டுவருவதை யும், தமிழ்நாட்டில் பாஜக-அஇஅதிமுக கூட்டணியை முறியடித்து, திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதை உத்தரவாதப்படுத்துவதையும், அசாமில் கட்சியின் செல்வாக்கு அதிகரிப்பதையும் உறுதி செய்வதுதான் என மத்தியக் குழு தீர்மானித்திருக்கிறது.

;