india

img

காலத்தை வென்றவர்கள் : உத்தம்சிங் நினைவு நாள்..

உத்தம் சிங் பகத்சிங்கைப் போலவே, 1919ம்ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையால் கோபம் கொண்ட  இளைஞன்.படுகொலைக்குக்காரணமானவர்களைப் பழிவாங்கப் புறப்பட்டு, பல சிரமங்களை எதிர்கொண்டு, பல நாடுகள் கடந்து, சமயம் பார்த்துக் காத்திருந்து 21 ஆண்டுகள் கழித்து அவர்களுடைய சொந்த மண்ணான இங்கிலாந்திலேயே பழிவாங்கியவன்.

அவன் தனக்குத் தானே, சூட்டிய பெயர் ராம் முகம்மது சிங் ஆசாத்! பஞ்சாப் மாநிலம் முழுவதும் அவன் நாட்டுப்புற வீரதீர நாயகனாகவும், தேசபக்த விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறான்.அவன் நினைவை, இலட்சியத்தைப் போற்றும் முகமாக “ராம்முகம்மது சிங் ஆசாத் என்கிற உத்தம்சிங்” என்கிற திரைப்படம் வெளிவந்துள்ளது.ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நேரடிக் காரணமானவர்கள் இருவர். ஒருவன், கொலைப்படைக்குத் தலைமையேற்ற தளபதி டயர். மற்றவன் அதற்கு உத்தரவிட்ட பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ. டயர். இவ்விருவரையும் கொன்று பழிதீர்ப்பது என்று சபதம் மேற்கொண்டான் செய்து முடித்தான். நீதி, சமத்துவம் பல்வேறு மதத்தவர்களிடையே சகோதரத்துவம் ஆகியவற்றை இலட்சியமாகக் கொண்ட உத்தம்சிங் அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த இந்தியர்களால் துவங்கப்பட்ட இந்திய கேதார் கட்சி (இந்திய புரட்சிக் கட்சி)யில் இணைந்தான் பகை முடித்தார்.உத்தம்சிங் ஒரு பயங்கரவாதி அல்ல.

சம்பந்தமில்லாத, அப்பாவி மக்களின் உயிருக்கு அவமரியாதை செய்வதுதான் பயங்கரவாதம். உத்தம்சிங்கும், பகத்சிங்கும் இலக்கை நோக்கிய, வரம்புக்குட்பட்ட வன்முறையை நம்பிய அதேசமயம் பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதை முக்கியமாகக் கொண்டிருந்தனர்.பகத்சிங், உத்தம்சிங் போன்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு.பகத்சிங்கின் உத்தம்சிங் கனவாானஎல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கும்இந்தியாவாக நம்நாடு மாற சகலபகுதி உழைக்கும் மக்களும் சுரண்டலுக்குஎதிரான ஒன்றுபட்ட போரில் கரம் கோர்த்து சமூக மாற்றக் கருவிகளாகமாறவேண்டியது காலத்தின் கட்டாயம். 

;