india

img

குடியரசு தின நிறைவு விழாவில் காந்தியின் விருப்ப பாடலை நீக்கிய ஒன்றிய அரசு  

குடியரசு தின நிறைவு விழாவின்போது இசைக்கப்படும் “அபெட் வித் மீ” என்ற மகாத்மா காந்திக்கு விருப்பமான பாடலை ஒன்றிய அரசு நீக்கியுள்ளது.  

ஒவ்வொரு ஆண்டும் டெல்லி ராஜபத் சாலையில் கோலாகலமாக நடைபெறும் குடியரசு தின விழாவில் ராணுவத்தின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடக்கும். பின்னர் குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படை வீரர்கள் தங்களது முகாமுக்கு திரும்பும் முன் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 ஆம் தேதி நடத்தப்படும் அணிவகுப்பே "பாசறை திரும்புதல்" ஆகும். இந்நிகழ்வில் முப்படைகளையும் சேர்ந்த இசைக்குழு, மகாத்மா காந்திக்கு விருப்பமான “அபெட் வித் மீ” என்ற பாடலை இசைக்கும். இந்த பாடல் இல்லாமல் சுதந்திர இந்தியாவின் குடியரசு தினம் நிறைவடையாது.

அந்தவகையில் இந்த பாடல் கடந்த 2020 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் இடம்பெறவில்லை. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் 2021 குடியரசு தின விழாவில் இடம்பெற்றது. ஆனால் தற்போது இந்த ஆண்டு மீண்டும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் காந்தியின் விருப்பப்பாடல் நீக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

;