india

சமையல் எண்ணெய்க்கு வரி குறைப்பு...

புதுதில்லி:
கச்சா சோயா எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி  7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

 கடந்த ஜூன் 29அன்று கச்சா பாமாயில் மீதான இறக்குமதி வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரி37.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கச்சா சோயா எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி, 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் ஒன்றிய  மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள  அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சுத்திகரிக்கப்பட்ட சோயா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரி, 45 சதவீதத்தில் இருந்து 37.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு செப்டம்பர்30 ஆம் தேதிவரை அமலில் இருக்கும்.

;