india

img

கோயிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதில் பெட்ரோல் விலையை குறைக்கலாம்...மத்திய பாஜக அரசுக்கு சிவசேனா கட்சி புத்திமதி...

புதுதில்லி:
மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அயோத்தியில் ராமா கோவில் கட்டுவதற்கான நிதியை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 

இதுவரை ரூ. 1600 கோடி வரை வசூலித்துள்ளது. தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.இந்நிலையில், ராமர் கோயில் நிதி வசூல் குறித்து, தனது பத்திரிகையான ‘சாம்னா’வில், விமர்சனங்களை வைத்துள்ள சிவசேனா, “நாடு முழுவதும் கோவில் கட்ட நன்கொடை வசூலிக்கும் பணி கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்வாறு ராமர் கோவில் கட்ட பணம் வசூலிப்பதற்குப் பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள். இதனால் ராம பக்தர்களுக்கு உணவு கிடைக்கும். ராமரும் சந்தோஷப்படுவார்” என்று குறிப்பிட்டுள்ளது.“கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நடிகர்கள் அக்சய்குமார், அமிதாப் பச்சன் போன்றவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர்” என்பதை நினைவுபடுத்தியுள்ள சிவசேனா, “தற்போது பெட்ரோல் விலை ரூ. 100-ஐ கடந்த போதும் சினிமா நட்சத்திரங்கள் மவுனமாக உள்ளனர்” என்று கூறியுள்ளது.

“2014-ஆம் ஆண்டு வரை கருத்து கூற சுதந்திரம் இருந்தது. அரசை விமர்சிப்பவர்கள் அப்போது, தேசத்துரோகவழக்கில் சிறையில் அடைக்கப்படவில்லை. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து கூறவேமுடியாமல் பேச்சுரிமையை இழந்துஉள்ளோம்” எனவும் சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

;