india

img

மேற்குவங்கத் தேர்தலில் வன்முறைக்குத் திட்டம்? நாட்டு வெடிகுண்டு தயாரித்த பாஜகவினர்... ஒருவர் பலி... 6 பேர் கவலைக்கிடம்....

கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த பாஜகவினர், எதிர்பாராத விதமாக குண்டுவெடித்து படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர்பலியாகியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக மார்ச் 27 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ஆரம்பூர் அருகிலுள்ள கோசாபாபகுதியில், ஞாயிறன்று நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில், ஒருவர் பலியான நிலையில், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.விசாரணையில், குண்டுவெடிப்பில் பலியான மற்றும் படுகாயம் அடைந்த 6 பேரும்பாஜகவினர் என்றும், இவர்கள் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுவந்தபோது, எதிர்பாராத விதமாக குண்டுவெடித்து, இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்கத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிட வேண்டும்என்று பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. மக்களை சாதி, மத ரீதியாக பிளவுபடுத்துதல், எதிர்க்கட்சியினரை வருமானவரித் துறை, அமலாக்கத்துறை மூலம் மிரட்டுதல், பணத்தால் விலைக்கு வாங்குதல் என்று அத்தனை அஸ்திரங்களையும் கையில் எடுத்துள் ளது. கோடிக்கணக்கில் பணத்தையும் இறக்கியுள்ளது.தற்போது, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பின்மூலம், வன்முறைக்கும் அக்கட்சி திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

;