india

img

பெகாசஸ்.... விவாதம் கோரிய  6  எம்.பி.க்கள் சஸ்பெண்ட்....

புதுதில்லி:
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று மாநிலங்களவையில் வலியுறுத்திய  6  எம்.பி.க்கள் புதன்கிழமையன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம்  பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி ,ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் பேச்சுகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் செய்திகள் வெளியிட்டன.நாட்டையே உலுக்கியுள்ள பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மோடி அரசு விவாதிக்க மறுத்து,இரு அவைகளையும் ஒத்திவைத்து வருகிறது. 

ஆகஸ்ட் 4 அன்று மாநிலங்களவையில் பெகாசஸ் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  வலியுறுத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்பதாகைகளை ஏந்தி, அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். இதனால் கோபமடைந்த அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, திரிணாமுல் எம்.பி.க்களான டோலோ சென், நாடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா செஹத்ரி, அர்பிதா கோஷ், மவுஸும் நூர் ஆகிய 6 பேரும் புதனன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்தார்.

;