india

img

‘இந்திய அரசைக் காணவில்லை’! என ‘அவுட்லுக்’ ஏடு கவர் போட்டோ.. உள்ளூர் ஊடகங்களிடமும் அவமானப்படும் மோடி...

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-ஆம் அலை, பல லட்சம் பேரைத் தாக்கி வரும் நிலையில், மத்திய பாஜக அரசு தொடர்ந்து அலட்சியமாக உள்ளது. 

ஒவ்வொரு நாளும் 4 ஆயிரம் இந்தியர்கள் செத்து மடிகின்றனர். மின் மயானங்கள்24 மணி நேரமும் எரிந்துகொண்டிருக் கின்றன. எரிப்பதற்கான இடமோ, பணவசதியோ இல்லாமல் பிணங்களை கங்கை, யமுனை போன்ற ஆறுகளில் தூக்கி வீசும் அவலங்கள் அரங்கேறி வருகின்றன. எனினும் இவை அனைத்தையும் மோடி அரசு வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. கொரோனா வேலையிழப்புகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பிற்கும் அவர்கள் உதவுவதாக இல்லை.

இந்திய அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டது; இந்தியர்கள் கொரோனா நரகத்தில் வாழ்கின்றனர் என்று ‘தி கார்டியன்’, ‘நியூயார்க் டைம்ஸ்’. ‘தி லான்செட்’ உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள்ஏற்கெனவே கடுமையான விமர்சனங்களைவைத்தும் மோடி அரசு தன்னை மாற்றிக் கொள்வதாக இல்லை. இந்நிலையில்தான், இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஆங்கில பத்திரிகையான ‘அவுட் லுக்’,‘இந்திய அரசைக் காணவில்லை’ என கவர்போட்டோ வெளியிட்டு மத்திய அரசைச்சாடியுள்ளது. தனது ஏட்டின் முகப்பில் ‘இந்திய அரசைக் காணவில்லை’ என்று புகைப்படம் வெளியிட்டு, அதில் ‘பெயர்: இந்திய அரசு,வயது: 7. கண்டுபிடிப்போர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: இந்திய குடிமக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது, மோடியின் கடந்த 7 ஆண்டுகால ஆட்சியில், அரசாங்கம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டது என்று விமர்சனத்தை வைத்துள்ளது. ‘அவுட் லுக்’ ஏட்டின் இந்த முகப்பு அட்டைப்படம் (கவர் போட்டோ) மத்தியபாஜக அரசுக்கு மற்றுமொரு அவமான மாக அமைந்துள்ளது.

;