india

img

நாடாளுமன்றத்திற்கு ஒருங்கிணைந்த புதிய  டி.வி.சேனல்  மத்திய அரசு அறிவிப்பு.....

புதுதில்லி:
நாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாநிலங்களவைத் தலைவர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோர் இணைந்து எடுத்த முடிவின்படி, நாடாளுமன்ற நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா டிவிகளை இணைத்து சன்சாத் டிவி என்னும் பெயரில் ஒரே டிவியாக இயங்க உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் குறித்த நிகழ்வுகள் இனி ஒரே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்படும். இந்த தொலைக்காட்சி சேனலுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவி கபூர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓராண்டு  வரை அல்லது அடுத்த உத்தரவு வரை இந்த பதவியில் நீடிப்பார்.மக்களவை செயல்படும் போது அதன் நேரலையை மக்களவைத் தொலைக்காட்சியும் மாநிலங்களவையின் நடவடிக்கைகளை மாநிலங்களவைத் தொலைக்காட்சியும் வழக்கம் போல ஒளிபரப்பும். இரு அவைகளின் கூட்டு நடவடிக்கை மற்றும் அவை நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில், இரண்டு தொலைக்காட்சிகளிலும் ஒரே நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். மக்களவையில் ஒரு நிகழ்ச்சி இந்தியிலும், மாநிலங்களவையில் அதே நிகழ்ச்சி ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;