india

img

நிர்வாண சாமியார்களின் தலைவர் கபில் தாஸ் கொரோனாவுக்குப் பலி.. அதிர்ச்சியில் உறைந்த சாமியார் சங்கங்கள்... 2 சங்கங்கள் கும்பமேளாவை விட்டு வெளியேறின.....

ஹரித்துவார்:
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா, கொரோனா தொற்றின் புதிய உற்பத்தி மையமாக மாறியுள்ளது. கும்பமேளாவில் புதனன்றுஒரே நாளில் 2 ஆயிரத்து 220 பேருக்குகொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நிர்வாண சாமியார்களின் அமைப்பான ‘நிர்வாணி அஹாடா’வின் தலைவரே தற்போதுகொரோனா-வுக்கு பலியாகி உள்ளார்.

ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்குஒருமுறை நடைபெறும் கும்பமேளாகடந்த மாதம் துவங்கியது. ஒவ்வொரு நாளும் பல ஆயிரக்கணக் கானோர் ஹரித்துவார் கங்கை ஆற்றில் நீராடி வருகின்றனர். மொத்தம் 3 மாதங்களுக்கு இந்த விழா நடைபெறும் என்பதால், கும்பமேளாவின் ஆரம்பத்திலேயே கொரோனா அச்சம் எழுப்பப்பட்டது. ஆனால், “ஹரித்துவார் நகரில் கங்காதேவி ஆறாக ஓடுகிறார். கொரோனாவில் இருந்து அவர் எங்களை காப்பாற்றுவார்” என்று உத்தரகண்ட் பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத் அலட்சியமாக கூறினார். ஆனால், வட இந்திய மக்களால், நடமாடும் கடவுள்களாக பார்க்கப்படும் சாமியார்களே தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை வரை 30 சாமியார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், ஹரித்துவாரில் முகாமிட்டிருந்த நிர்வாண சாமியார்கள் அமைப்பான மகா நிர்வாணி அஹாடா-வின் தலைவர் (மகா மண்டலேஸ்வர்) கபில் தேவ் தாஸ் (65) கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு இறந்தே போனார். இது கும்பமேளாவில் உள்ள ஏனைய நிர்வாண சாமியார்களை அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.இதையடுத்து, சாமியார் சங்கங்களிலேயே பெரிய அமைப்பான ஜூனா அஹாடாவும், மற்றொரு சாமியார் அமைப்பான நிரஞ்சனி அஹாடா கும்பமேளாவை விட்டே வெளி யேறுவதாக அறிவித்துள்ளன.

படம் : நன்றி  சான்ட்னா செய்திகள் (ஹிந்தி)..   

;