india

img

இணைய வழி மோசடியாளர்களை கண்டறிய புதிய  கருவி கண்டுபிடிப்பு....

சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம்  ரோபோரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர், இணைய வழி மோசடியாளர்களை கண்டறிய புதிய  கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது கொரோனா  காலகட்டத்தில், பெரும்பாலான அலுவலகம் மற்றும் அரசியல்கட்சிகளின் கருத்தரங்குகள், கூட்டங்கள், பணிகள்  இணையதளம் வாயிலாக நடைபெற்றுவருகின்றன.  இதுபோன்ற ஆன்லைன் நிகழ்ச்சி களில்  எவருக்கும் தெரியாமல் நுழையும் போலி நபர்களைக் கண்டறிவதற்காக  ‘ஃபேக்பஸ்டர்’ என்று அழைக்கப்படும் தனித்துவம் வாய்ந்த கருவியை இணைந்து உருவாக்கியுள்ளனர். சமூக ஊடகங்களில் ஒருவரைக் களங்கப்படுத்தும் அல்லது கேலி செய்யும் வகையில் ஒருவரது முகத்திற்குப் பதிலாக வேறு ஒருவரது முகத்தை மாற்றுவது போன்ற செயல்களையும் இந்தக் கருவியால் கண்டறிய முடியும்.

இந்த ‘ஃபேக்பஸ்டர்’ கருவியை உருவாக்கிய குழுவில் முக்கிய உறுப்பினரான டாக்டர் அபினவ் தால் கூறுகையில், “அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் வாயிலாக ஊடகங்களில் போலியான தகவல்கள் அதிகரித்துள்ளன. இது போன்ற தொழில்நுட்பங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து மிகவும் யதார்த்தமாகக் காட்சி தருகின்றன. இதனைகண்டறிவது மிகவும் சவாலாக உள்ளது” என்றார். 

;