india

img

அமெரிக்காவிடம் ராணுவ டிரோன்களை வாங்கும் இந்தியா...

புதுதில்லி:
அமெரிக்காவிடம் இருந்து 30 ராணுவ ஆயுதடிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தியில் , அமெரிக்காவில், சாண்டியாகோவில் உள்ள ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து எம்கியூ 9-பி பிரிடேட்டர் (MQ-9B Predator drones) என்ற டிரோன்கள் வாங்கப்பட உள்ளன. இந்த டிரோன்கள் தொடர்ந்து 48 மணி நேரம் பறக்கக்கூடிய திறன் கொண்டவையாக இருப்பதுடன்,   1700 கிலோ எடை வரையிலான ஆயுதங்களை அவற்றால் சுமந்து செல்ல முடியும். தென்சீனகடலில் சீன போர் கப்பல்களின் நடமாட்டத்தையும், இமாலய பகுதிகளில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் அத்துமீறுவதை தடுக்கவும் இந்த டிரோன்கள் பயன்படும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;