india

img

2019-ஆம் ஆண்டில் 96 பேர் தேசத் துரோக வழக்கில் கைது.... கர்நாடகத்தில் அதிகபட்சமாக 22 பேர்....

புதுதில்லி:
நாடு முழுவதும் கடந்த 2019-ஆம் ஆண்டு 96 பேர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதாக மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி கிஷன் ரெட்டி பதில் அளித்துள்ளார்.அதில், “கடந்த 2019-ஆம் ஆண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 93 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 76 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 29 பேர் விடுவிக்கப்பட்டனர்.கர்நாடக மாநிலத்தில் மட்டும் கடந்த 2019-ஆம் ஆண்டில் 22 தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 18 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல அசாம் மாநிலத்தில் 17 தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23 பேரும், ஜம்மு - காஷ்மீரில் 11 பேர் மீது வழக்கு போடப்பட்டு, அதில் 16 பேரும் கைது செய்யப்பட்டனர்.உத்தரப்பிரதேசத்தில் 10 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 9 பேர் கைது செய்யப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

;